#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் இவர் தானாம்; படித்துவிட்டு சிரித்து விடாதீர்கள்!
அமெரிக்காவின் குளோபல் கம்யூனிடி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கபட இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். இவரது மகளான தமிழிசை சவுந்தரராஜன் தந்தையின் வழியை பின்பற்றாமல், கடந்த 1999 இல் பாஜக உறுப்பினரானார். 15 ஆண்டுகளாக கட்சியில் சிறப்பாக பணியாற்றிய தமிழிசைக்கு 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியை அளித்தது பாஜக.
அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தமிழிசை தான் தமிழக பாஜக தலைவர் என மேலிடம் அறிவித்தது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே பாஜகவுக்கு பெண் ஒருவர் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டும் தமிழிசை தமிழிசையால் ஒரு முறை கூட வெற்றிபெற முடியவில்லை.
இருப்பினும், தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதிலும், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனவும் தமிழிசை உழைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடமிருந்து பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசியல்,மருத்துவ,சமூகசேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண் தலைவர் என்று சிகாகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8-வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மற்றும் சிகாகோ, வாஷிங்டன் மற்றும் பாஸ்டன் நகரின் தமிழ்சங்ககளின் அழைப்பை ஏற்று கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அரசியல்,மருத்துவ,சமூகசேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண்தலைவர் என்று சிக்காகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில்“INTERNATIONAL RISING STAR OF THE YEAR” விருது.@BJP4India @BJP4TamilNadu pic.twitter.com/26mCupv219
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 27, 2018
இதுகுறித்து தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.