#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் ஈழ சொந்தங்களை விடுவித்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி: சீமான் நெகிழ்ச்சி..!
ஈழத்தமிழர்கள் 16 பேரை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவித்த தமிழக அரசுக்கு நன்றி கூறுவதாக சீமான் கூறியுள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் 16 பேரை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மேலும் கூறியிருப்பதாவது:-
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன்.
இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சி சிறப்புமுகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். (1/3)
— சீமான் (@SeemanOfficial) July 2, 2022
இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.