#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுக கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அதிகாரபூர்வ பட்டியல்! வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.!
நாடு தோறும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. அதில் இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
மதிமுக - ஈரோடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - ராமநாதபுரம்
இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி - நாமக்கல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1.சிதம்பரம்
2. விழுப்புரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1. மதுரை
2. கோவை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1.நாகை
2.திருப்பூர்
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
1. திருவள்ளூர்
2. ஆரணி
3. திருச்சி
4. கரூர்
5. சிவகங்கை
6. கிருஷ்ணகிரி
7. விருதுநகர்
8. தேனி
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி
திமுக போட்டியிடும் தொகுதிகள்
1. தென்சென்னை
2. மத்திய சென்னை
3. வடசென்னை
4. ஸ்ரீ பெரும்புதூர்
5. காஞ்சிபுரம் ( தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. திருவண்ணாமலை
9. சேலம்
10. கடலூர்
11. தர்மபுரி
12. திண்டுக்கல்
13. கள்ளக்குறிச்சி
14. மயிலாடுதுறை
15 .நீலகிரி
16. பொள்ளாச்சி
17. தென்காசி
18. தஞ்சாவூர்
19. தூத்துக்குடி
20. நெல்லை