மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
# | BREAKING| திடீர் திருப்பம்; முதல்வர் ஸ்டாலினுக்காக அப்போலோ வாசலில் குவியும் திமுகவினர்..! திணறும் போலீஸார்..!!
![STALIN IN APOLLO HOSPITAL](https://cdn.tamilspark.com/large/large_stalin-2-61886.jpg)
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதின் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக வழக்கமாக செய்யப்படும் சோதனையான மாதாந்திர பரிசோதனைக்காக தான் சென்றுள்ளார். பின்பு அங்கு அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் இந்த பரிசோதனை முடிந்து ஓய்வெடுத்தபின் நாளை இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார் என்று அம்மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலறிந்த திமுக தொண்டர்கள் அப்போலோ வாசலில் கூடியிருப்பதாக கூறுகிறார்கள். இதனால் ஏதேனும் பதற்றம் நிலவக்கூடும் என்று போலீசார் குவிந்திருப்பதாக தெரிகிறது.