பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இளம் பெண்ணுடன் சண்டையிட்ட தமிழிசை சவுந்தராஜன்!. அவருக்கு ஸ்டாலின் விடும் சவால்!.
பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்தார். அப்போது திடீரென விமானத்தில் பயணித்த சோபியா என்ற இளம் பெண் ஒருவர், தமிழிசையை கண்டதும் பாசிசம் ஒழிக்க., பாஜக ஆட்சி ஒழிக., என்று பாஜகவுக்கு எதிராக ஆக்ரோஷமாக கோஷமிட்டார்.
அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகளில் அந்த இளம் பெண் மட்டும் தனி ஆளாக தமிழிசையை கண்டதும் பாஜகவுக்கு எதிரான முழக்கமிட்டதை கண்டு பயணித்த மொத்த பயணிகளும் திகைத்தனர்.
இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் விமான நிலையத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். அவர்கள் சண்டையிட்ட வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
அவர் புகார் அளித்த 10 மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்த்து கோஷமிட்ட காரணத்திற்காகவும், அவதூறாக பேசியதற்காகவும் வழக்கு பதியபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) 3 September 2018
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5
இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றும் உடனடியாக சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? "நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக" என பதிவிட்டுள்ளார்.