#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தி தொலைக்காட்சி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு; கடுப்பில் டிடிவி
தந்தி தொலைக்காட்சி தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கருத்துக்கணிப்பை நடத்தியது. குறிப்பாக, தமிழகத்தில் அடுத்த முதல்வராக யாரை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்கிற கேள்வி கொடுக்கப்பட்டது.
அதற்கு 51 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி -ஓபிஎஸ் தரப்புக்கு 25 சதவீதம் பேரும், டிடிவி தினகரன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு 6 சதவீதம் பேரும், கமல்ஹாசனுக்கு 5 சதவீதமும், அன்புமணிக்கு 4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் " ஒரு குறிப்பிட்ட மக்களிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகள் எப்படி சரியாக இருக்கும்? இப்படிபட்ட கருத்தை திணிப்பது சரியல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆர்.கே.நகரில் கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கினேன். இது தெரிந்தும் மீண்டும் எனக்கு 6 சதவீதம் என தைரியமாக கூறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் எங்கள் உறுப்பினர் சேர்க்கையே 30 ஆயிரம் பேரை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. சில தொகுதிகளில் 70 ஆயிரத்தையும் தாண்டி விட்டது.
ஆனால், எங்களுக்கு வெறும் 6 சதவீத மக்கள் ஆதரவளிப்பதாக காட்டுகிறார்கள்" என கோபமாக பதிலளித்தார்.