#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பது வெறும் நாடகம்! சுட்டிக்காட்டும் அமைச்சர் உதயநிதி!
நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், அக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி முறிவு விவகாரத்தில் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயார். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. எதிர்வரும் தேர்தலுக்கு நமது தலைமையில் மட்டுமே கூட்டணி. அதில் பாஜக இருக்காது என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் தரப்பிற்கு அவரது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில்,
"பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பதாக அறிவித்திருப்பது வெறும் நாடகம். தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக வந்துதான் ஓட்டுப் பிச்சை கேட்பார்கள். ஒருவர் திருடன் என்றால் ஒருவர் கொள்ளைக்காரர். இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்" என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.