மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்தின் உடல் வீட்டிற்கு வந்தடைந்தது.. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடி..!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு விஜயகாந்துக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது 71 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். மேலும் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்தடைந்தது. அவரது மறைவை முன்னிட்டு இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தேமுதிக கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.