பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அரசியலிலும் இணைவோம், புதிய கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள் ,!
தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க நான் தயார் எனவும்,அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,நடிகருமான சரத்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது , நானும்,நடிகர் விஜயகாந்தும் திரையுலகில் ஒன்றக இணைந்து பயணித்துள்ளோம்.
நாங்கள் சிறந்த நண்பர்கள்.மேலும் காலமும் சூழலும் சரியாக அமைந்தால் அரசியலிலும் விஜயகாந்துடன் ஒன்றாக இணைந்து செயல்படுவதில் தயாராக உள்ளேன் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அப்போது சமத்துவ மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய சரத்குமார் உள்ளாட்சி தேர்தல் மாநிலத்திற்கு அவசியமான ஒன்று என்றும் அதனை விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது அரசியல் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.