35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தேனியில் விஜயகாந்த் மகன் போட்டியா! தேமுதிக செயல்வீரர்கள் முடிவு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தே.மு.தி.க. ஆனால் அதில், தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அதிமுக, பாஜக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேமுதிக சார்பில் கூட்டணி பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழுவினருடன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார். தொகுதி பங்கீடு குறித்து சரியான முடிவு எட்டப்படாததால் கூட்டணி குறித்து இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.
இரண்டாவது நாளாக இன்றும், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.