பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
உல்லாசமாக இருக்க வந்த இடத்தில காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலர் ! நடந்தது என்ன?
நொய்டாவில் தனியாக அறை எடுத்து தங்கிய காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 22 வயதான மோஹித் என்பவர் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அப்போது அதே பயிற்சி மையத்தில் அவருடன் பயின்று வந்த மற்றொரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மோகித் காசியாபாத்தில் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை இவர்கள் இருவரும் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இருவரும் உல்லாசமாக இருப்பதற்காகத்தான் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் வந்த இடத்தில் இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோஹித் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தன் காதலியை சுட்டுள்ளார். படுகாயம் அடைந்த அந்த பெண் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த அந்த காதலன் அதே அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த தனியார் விடுதிக்கு விரைந்து வந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த பெண்ணுக்கு டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட அந்த இளைஞருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, இவர்களுக்கு என்ன மோதல் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.