#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
17 வயது மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர்... போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!
12ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர் அருகேயுள்ள பனங்காட்டுபுதூரில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி. அவரது 17 வயது மகள், பாசூரில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகளின் நிலையை கண்ட பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். அப்போது மாணவி மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார்.
மருத்துவமனைக்கு வர மறுப்பது குறித்து மாணவியின் தாயார் விசாரித்தபோது, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்துள்ளனர்.
அப்போது, மாணவியும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகனான தாமோதரன் (22) என்பவரும் பழகி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் மிகவும் நெருங்கி பழகிவந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவி வீட்டில் இருந்த நிலையில், பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, தாமோதரன் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் காரணமாக மாணவி கர்ப்பமடைந்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரினை பெற்று கொண்ட காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு தாமோதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.