#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
1 கோடி 2 கோடி இல்ல!! ஐபில் போட்டியை பாதியில் நிறுத்தினால் எத்தனை ஆயிரம் கோடி நஷ்டமாம் தெரியுமா?? அடேங்கப்பா!!
ஐபில் தொடரை பாதியில் நிறுத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 2200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்ப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பரவிவரும் கொரோனா பேரலை மற்றும் அணி வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஐபில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளை நிறுத்துவதாக BCCI தெரிவித்துள்ளது.
ஐபில் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ பல கோடி ரூபாய் நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டமடைய வாய்ப்புள்ளது எனவும், சரியாக கூறவேண்டுமானால் 2200 கோடி ரூபாய் நஷ்டமடைய வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த ஐபில் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டால், ஐபில் தொடரை ஒளிபரப்பிவரும் Star Sports நிறுவனம், டைட்டில் ஸ்பான்சர் VIVO நிறுவனம், இணை ஸ்பான்சர்களான Unacademy, Dream11, CRED, Upstox, Tata Motors ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பெற்ற தொகையில் பாதியை இந்திய கிரிக்கெட் வாரியம் திருப்பி செலுத்தவேண்டி இருக்கும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது.
இதனால் கொரோனா சூழ்நிலையைப் பொறுத்து வரும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.