#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
5 வயதில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக சிறுவன்!. குவிந்துவரும் பாராட்டு!.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான் தமிழகத்தை சேர்ந்த சிறுவன்.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு இடையேயான சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றன. இந்த போட்டியில் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தவிஷ் என்ற 5 வயது சிறுவன் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளான்.
வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற சிறுவன் தாய்யலாந்தில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினான். சிறுவன் தவிஷூக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது 5 வயதிலேயே பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த அந்த சிறுவனுக்கு பாராட்டு மழைகள் பொழிந்துவருகின்றது. பதக்கம் வென்ற சிறுவனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.