அப்ரிடியின் கருத்துக்கு ரவிசாஸ்திரி ஒத்துழைப்பு.. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலம் என்னவாகும்?



Afridi and shahtri asks to reduce odi over to 40

சமீபத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பிற்கு பின்பு ஒருநாள் போட்டிகள் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் விறுவிறுப்பு ஒருநாள் போட்டியில் இல்லை என்பதால் ஒருநாள் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. இதனால் சர்வதேச ஒருநாள் போட்டிகளை கைவிட்டு விடலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி ஒருநாள் போட்டிகளுக்கான ஓவர்களை 50 இல் இருந்து 40 ஆக குறைத்தால் ஆட்டத்தில் சுவாரசியம் அதிகமாக வாய்ப்புகள் உண்டு என தெரிவித்திருந்தார். தற்போது இதே கருத்தை ஏற்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியும் பேசியுள்ளார்.

இதைப்பற்றி அவர் கூறுகையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் போது 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் காலப்போக்கில் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதைப் போன்று இப்போதும் 40 ஓவராக குறைத்தால் ஒருநாள் போட்டியிலும் விறுவிறுப்பு அதிகமாகும் என கூறியுள்ளார்.