#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு சிஎஸ்கே டீம்ல ஆடணும்னுதான் ஆசை..! காத்திருக்கும் பிரபல வீரர்..! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
2022ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளும், ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டு, 2 முதல் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள வீரர்களை, ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடுவை மீண்டும் ஏலத்தில் எடுக்க அதிக கவனம் செலுத்தப்போவதாக தகவல் கசிந்துள்ளது. சென்னை அணிக்காக அவர் கடந்த 4 சீசன்களாக விளையாடிய போதும், இந்தாண்டு கழட்டிவிடப்பட்டார். மிடில் ஆர்டரில் மிக சிறப்பாக விளையாடுபவர் என்ற பெயரை பெற்றவராக ராயுடு உள்ளார்.
இந்தநிலையில், சிஎஸ்கே அணிக்காக மீண்டும் ஆடும் விருப்பம் பற்றி பேசிய அம்பத்தி ராயுடு, 2019 ஆம் ஆண்டு இந்திய உலக கோப்பை அணியில், நான் தேர்வாகாமல் போனது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதில் இருந்து, என்னை மீண்டும் பார்முக்கு வர உதவியது சிஎஸ்கே தான். நான் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக தான் ஆட விரும்புகிறேன். சிஎஸ்கே அணி சார்பாக, யாரும் இதுவரை என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆனால், அந்த அணியில் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என ராயுடு தெரிவித்துள்ளார்.