பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விராட் கோலிக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா சர்மா! வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்து மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்தியாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாக இருப்பவர்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா. ஜீரோ படத்திற்கு பிறகு அனுஷ்கா சர்மா தற்போது வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் டெஸ்ட் தொடரை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவர் விராட் கோலியை வரவேற்க அனுஷ்கா சர்மா திடீரென வருகை தந்தார். இந்த விசயம் விராட் கோலிக்கு தெரியவில்லை.
விமான நிலையத்தில் காரிலேயே அமர்ந்திருந்த அனுஷ்கா சர்மா கணவர் விராட் கோலி வந்ததும் மிகுந்த சத்தத்துடன் ஆரத் தழுவி முத்தமிட்டார். இதனை எதிர்ப்பார்க்காத விராட் கோலி மிகவும் அதிர்ச்சியடைந்தார்.