நிறத்தை கொச்சைப்படுத்தி ஜோப்ரா ஆர்ச்சரை கேலி செய்த ரசிகர்! மன்னிப்பு கோரிய நியூசிலாந்து



Archer was abused rasically against Newzland

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. 

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கடைசி நாளான இன்று தோல்வியை தவிர்ப்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் மிகவும் போராடினர். 

குறிப்பாக 9 ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சாம் குர்ரான் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் நீண்ட நேரம் களத்தில் நின்றனர். ஆனால் ஒருவழியாக நியூசிலாந்து அணி போட்டியை வென்றது. 

jofra archer

இந்த போட்டியின் முடிவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆர்ச்சர், "எனது அணிக்காக நான் பேட்டிங் செய்த போது மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் என்னை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியது  எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அந்த ஒரு ரசிகரை தவிர மற்ற எல்லோரும் நல்ல உற்சாகம் அளித்தனர்" என பதிவிட்டுள்ளார். 

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், இவ்வாறு பேசிய ரசிகரை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிய முயற்சித்து வருகிறது. மேலும் இனத்தின் அடிப்படையில் யாராவது கேலி செய்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.