#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'ஊக்க மருந்தா அதன் பெயர் கூட தெரியாதுங்க' பரிதாபத்தை அள்ளும் தங்க மங்கை கோமதி மாரிமுத்து.!
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கி நடந்தது. இதில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் (2 நிமிடம் 2.70 விநாடி) ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவ கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இப்படி ஒரு பெருமையை சேர்த்தார்.
போட்டியின் போது கோமதி மாரிமுத்துவிடம் ஊக்கமருந்து சோதனைக்கான சாம்பிள் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ஊக்கமருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
நான்ட்ரோலோன் என்ற தடை செய்யப்பட்ட பொருள் சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனால், கோமதிக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஒருவேளை அவரின் ‘பி’ சாம்பிளிலும் அவருக்கு எதிராக அமைந்தால், கோமதி அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
இது தொடர்பாக கத்தார் சென்றுள்ள கோமதி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறுகையில், "ஊக்க மருத்து எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன் பெயர் கூட எனக்கு தெரியாது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஊக்கமருந்து எடுக்கவில்லை. இதை நிரூபிக்கும் வரை விட மாட்டேன், ஜெயித்துக் காட்டுவேன்.’ என்றார்.