சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
முதலில் தடுமாறினாலும் பிறகு சுதாரித்த ஆஸ்திரேலியா! இந்திய அணிக்கு 289 ரன்கள் இலக்கு
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டமானது இன்று சிட்னியில் துவங்கியது. இந்திய நேரப்படி காலை 7:45 மணிக்கு துவங்கிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா, ராகுல் சண்பென்ட் செய்யப்பட்டதால் அவர்கள் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சிட்னி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தோனி விக்கெட்கீப்பராகவும், தினேஷ் கார்த்திக் கூடுதல் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சில் கலீல் அகமது, புவனேஷ் குமார், முகமதுஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் மற்றும் அலெக்ஸ் கேரே, கலீல் அகமது, புவனேஷ்குமார் வீசிய முதல் இரு ஓவர்களில் தடுமாறினார்கள். புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். 96 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய 12-வது இந்திய வீரர் எனும் பெருமையையும் புவனேஷ்குமார் பெற்றார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரம் நிதானமாக ஆடிய அலெக்ஸ் கேரே பத்தாவது ஓவரில் குலதீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் பொறுமையாக ஆடி அரைசதம் அடிக்க கவாஜா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சு அவுட்டானார். டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய ஷான் மார்ஷ் இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த மார்ஸ் 54 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் ஹான்ஸ்காம்புடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டாய்னிஸ். ஹான்ஸ்காம்ப் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக எதிர்கொண்டார். அவ்வப்போது பவுண்டரிகளையும் சிக்சர்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதம் அதிகரிக்க துவங்கியது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹான்ஸ்காம்ப் 48 ஆவது ஓவரில் புவனேஷ்குமார் பந்தில் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் 61 பந்துகளில் 6 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடினர். மேக்ஸ்வெல் 11 ரன்களும் ஸ்டாய்னிஸ் 47 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் புவனேஷ் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.