பந்தில் வியர்வை பட கூடாது.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!



Australia cricket board new rules about using sweat

கொரோனா தாக்கத்திற்கு பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான விதிமுறையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு பந்தில் வியர்வையை தடவ கூடாது என உத்தவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக எந்த வீரர்களும் பந்தில் எச்சிலை கொண்டு தேய்க்க கூடாது என ஐசிசி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது இதோடு கூடுதலாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தங்களது வீரர்களிடம் கை, முகம் மற்றும் உடலில் வரும் வியர்வையை கொண்டு பந்தினை தேய்க்க கூடாது என உத்தவிட்டுள்ளது.

Australia cricket boardஇந்த விதிமுறையினை ஆஸ்திரேலியா வீரர்கள் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் இந்த அறிவிப்பு குறித்து அந்நாட்டு வீரர் மிச்செல் ஸ்டார்க் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெள்ளை பந்தில் விளையாடும் பொழுது இந்த விதிகளால் எந்த சிக்கலும் வராது. ஆனால் டெஸ்ட் போட்டியில் சிகப்பு பந்தில் விளையாடும் பொழுது எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்தாமல் பந்து வீசுவது சற்று சவாலான விஷயம் தான் என  கூறியுள்ளார்.