பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
போட்டிக்கு நடுவே திடீரென மைதானத்தில் குப்புற படுத்த வீரர்கள்.. என்ன காரணம் தெரியுமா? வைரல் வீடியோ..
மைதானத்திற்குள் தேனீக்கள் புகுந்ததால் வீரர்கள் மைதானத்தில் குப்புற படுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் டேரன் பிராவோ சதமடித்து அசத்த, 49 ஆவது ஓவரில் இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 38 வது ஓவரில் தேனீக்கள் சில மைதானத்திற்குள் படையெடுத்தது. இதனால் பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் உட்பட அனைவரும் மைதானத்திலையே குப்புற படுத்துக்கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து தேனீக்கள் சென்ற பிறகு வீரர்கள் மீண்டும் ஆட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
Bee 🐝 attack in #WIvSri#INDvENGt20 #Cricket pic.twitter.com/KgA5as5myR
— Cricket Scorecards (@MittiDaPutla) March 14, 2021