புயல் வேகத்தில் பும்ரா..... ஜாம்பவானின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா.!
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. அந்த சமயத்தில் கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 5-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தற்போது நடந்து முடிந்தது.
இப்போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் கபில் தேவ்வின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
1981-82ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் பும்ரா இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2014-ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார்.