பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
MS Dhoni: சென்னையில் வைத்து ஓய்வை அறிவிக்கிறாரா தல தோனி?.. வருத்தத்தில் ரசிகர்கள்..!
கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக தோனி விடைபெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, கடந்த உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகள், கடந்த கால பிரச்சனைகள் என அவர் அம்முடிவை எடுத்தார். தற்போது 41 வயதாகும் தோனி ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Never thought that @msdhoni might have to play his last match on my birthday. Hope they make it to the playoffs.#CSK #IPL2023 pic.twitter.com/u7jQZhLBWp
— Navneet Jha (@imnot_nav) February 19, 2023
அவர் அதில் இருந்தும் அவ்வப்போது ஓய்வு பெறலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தநிலையில், அவர் மே மாதம் 14ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியுடன் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யலாம் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய நாளில் சென்னை மைதானத்தில் வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் பலபரீட்சை செய்கின்றன. இந்த போட்டியே தோனியின் இறுதி போட்டி என பல உயர்மட்ட அளவில் இருந்து தகவல் வெளியானாலும், அவை தோனியால் உறுதிபடுத்தப்படவில்லை.