#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை அணியின் புது பவுலர் போட்ட பந்துல சிதறிய ஸ்டெம்ப்... அதுவும் தல தோனியாவே சாச்சுப்புட்டாரு.. வைரல் வீடியோ..
சென்னை அணியின் புது பந்து வீச்சாளர் ஒருவர் தோனியின் ஸ்டெம்பை பறக்கவிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஐபில் 14 வது சீசன் அடுத்த மாதம் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஐபில் போட்டியை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. குறிப்பாக சென்னை அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து, இந்த முறை எப்படியும் கோப்பையை கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற முனைப்புடன் சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில் சென்னை வந்துள்ள அணியின் கேப்டன் தோனி கொரோனா தனிமைப்படுத்தலை முடித்து கொண்டு அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
கேப்டன் தோனிக்கு சென்னை அணி புதிதாக ஏலத்தில் எடுத்துள்ள ஹரிசங்கர் ரெட்டி பந்துவீசுகிறார். அவரது பந்தை சமாளிக்க முடியாமல் தோனி ஸ்டெம்பை பறிகொடுக்கிறார். ஸ்டெம்ப் சில அடி தூரம் தூக்கி வீசப்படுகிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
20 லட்சம் ரூபாய் அடிப்படை விலைகொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட ஹரிசங்கர் ரெட்டி தனது தரமான பந்துவீச்சினால் தோனியை அவுட்டாகிய விதத்தையும் பார்க்கும் போது அவர் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hari Shankar Reddy taking Dhoni's wicket during the practice#IPL2021 pic.twitter.com/zpEv8gHsp8
— Vinesh Prabhu (@vlp1994) March 17, 2021