#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோப்பையை வெல்லப்போவது யார்? இந்த அணிக்கே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. மும்பை மற்றும் சென்னை அணிகள் நாளை இரவு 7 . 30 மணிக்கு கைதராபாத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் மோதுகிறது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தொகுத்து பெற்றது.
சென்னை மற்றும் மும்பை இடையே இந்த சீசனில் நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் சென்னை அணி ஒரு முறை கூட வெற்றிபெறவில்லை. மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது. இந்நிலையில் நான்காவது முறையாக இந்த இரு அணிகளும் நாளை இறுதி போட்டியில் மோதுகிறது.
இதுவரை சொதப்பலாக இருந்த சென்னை அணியின் ஓப்பனிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக அமைந்தது சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இதே ஓப்பனிங் மும்பை அணியுடனும் நிச்சயம் இருக்கும் என சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும், இந்த சீசனில் நடந்த அணைத்து போட்டிகளிலும் சென்னை அணி தோற்றத்தால் நாளைய ஆட்டத்தில் முழு பலத்துடன் சென்னை அணி விளையாடும். இதனால் இந்த முறையும் சென்னை அணி கோப்பை வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை அணியின் பந்துவீச்சு சென்னை அணிக்கு மேலும் கூடுதல் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.