பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விக்கெட் விழுந்ததும் வெஸ்டிண்டிஸ் வீரர்கள் செய்த காரியம்! சிரிப்பு மழையில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நான்காவது இடத்தை பிடிப்பது நியூசிலாந்து அணியா பாகிஸ்தான் அணியா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்டிண்டிஸ் அணிகள் மோதும் ஆட்டமானது இன்று நடைபெற்றுவருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்டிண்டிஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. ஹோப் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலையே தனது முதல் விக்கெட்டை இழந்தாலும் அதன்பின்னர் இக்ராம் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இந்நிலையில் ரஹ்மத் ஷா 78 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ராத்வைட் வீசிய பந்தில் கிறிஸ் கெய்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஹ்மத் ஷாவின் கேட்சை கீழே விழுந்து படுத்தபடி கேட்ச் பிடித்த கிரிஷ் கெய்ல் மைதானத்தில் படுத்தவாறே புஷ் அப் செய்ய ஆரம்பித்தார். கிறிஸ் கெயிலுடன் சேர்ந்து ப்ராத்வைட்டும் மைதானத்தில் படுத்தவாறு புஷ் அப் செய்ய ஆரம்பித்தனர்.
மொத்தம் ஆறு புஷ்அப் செய்து விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாடினர் வெஸ்டிண்டிஸ் அணி வீரர்கள். இவர்களின் இந்த திடீர் செயலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
As celebrations go, this one may take some beating!#AFGvWI | #CWC19 pic.twitter.com/W7pn6mptG7
— Cricket World Cup (@cricketworldcup) July 4, 2019