பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஐ.பி.எல் போட்டியில் நான் இரட்டை சதம் அடிக்காததற்கு அந்த வீரர் தான் காரணம்! கிரிஸ் கெய்ல் அதிரடி பேச்சு!
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் அணைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் விளையாட்டு வீரர்கள் சமூகவலைத்தளங்களில் உரையாடி வருவது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட நிகழ்வு குறித்து கிரிஸ் கெய்ல் தற்போது ஓப்பனாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், அந்த போட்டி தொடங்கிய இரண்டு ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. மழை வந்ததால் களத்தில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். பிறகு ரவி ராம்பாலிடம் நான் 170-180 ஓட்டங்கள் அடித்தால் போதும் என்று சொன்னேன். ஆனால் அதன் பின்னர் நான் பேட்டிங் செய்யும்போது நல்ல பார்ம்க்கு வந்தேன்.
சில நேரங்களில் நாம் களத்தில் நிலைத்து நின்று விட்டால் இனி மேல் நம்மை அவுட்டாகும் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றும். அதே போன்று அன்றைக்கு எனக்கான நாளாக அமைந்தது. கடைசியில் 175 ஓட்டங்களுடன் நான் இன்னிங்சை முடித்தேன்.
டிவில்லியர்ஸ், டெத் ஓவர்களில் வந்து காட்டடி அடித்தார். அன்று அவர் மட்டும் கடைசியில் வந்து அதிரடியான பேட்டிங்கை ஆடவில்லையென்றால், நான் இரட்டை சதமடித்திருப்பேன் என்று கெய்ல் தெரிவித்தார்.