#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் முதல் விருந்து! உற்சாகத்துடன் காத்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஐபிஎல் 2020 தொடரில் தொடரின் முதல் லீக்கின் முழு அட்டவணையும் வெளியாகியுள்ளது. மார்ச் 29 ஆம் தேதி மும்பையில் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் என்றாலே இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து என்றுதான் கூறலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, பிரோவா, ஜடேஜா, அஸ்வின் வாட்சன்,தாஹிர் போன்ற வீரர்களை தமிழக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
அதேபோல் தமிழகத்தில் இரண்டாவது அதிகப்படியான ரசிகர்கள் உள்ள அணி மும்பை இந்தியன்ஸ் என்றே கூறலாம். அதற்க்கு முக்கிய காரணம் அந்த அணி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டதுதான். சச்சின் தலைமையில் விளையாடும் அணி என்பதால், அவரது ரசிகர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலும் நடந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமாக வென்றது.
எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுவதால் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏமாற்றத்துடன் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் பலி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.