#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிஎஸ்கே முதல் இடத்தில் இருந்தாலும் கிக் இல்லாமல் இருந்த சென்னை ரசிகர்கள்! நேற்று நடந்த ஆட்டத்தால் ரசிகர்களின் மனநிலை!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த வருடம் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு 3 ஆவது முறையாக கோப்பையை வென்று 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற2ஆவது அணி என்ற பெருமையை பெற்றது.
சென்னை மைதானத்தில் நடந்த போட்டி என்பதால் ரசிகர்கள் ஏராளமானோர் சென்னை மைதானத்தில் குவிந்தனர். சென்னையில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதிய பெங்களூரு அணி 17.1 ஓவர்களுக்கு 70 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆனால் அந்த ஆட்டத்தையும் சென்னை அணி கஷ்டப்பட்டு ஆடி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்தடுத்து சென்னையில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாலும், அங்கு நடந்த ஆட்டம் டெஸ்ட் மேட்ச் போல இருந்து ரசிகர்களை ஏமாற்றியது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 41 வது போட்டியில் சென்னை மற்றும் கைதராபாத் அணிகள் விளையாடியது. முதல்முறையாக இந்த சீசனில் சென்னை மைதானத்தில் இரு அணிகளும் சிறப்பாக ஆடினர். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து சென்னை ரசிகர்களை உற்சாக படுத்தினார். இறுதியில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. நேற்று நடந்த ஆட்டம் சென்னை ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.