பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓய்வை அறிவித்தார் ஆஸி., அணியின் நட்சத்திர நாயகன் டேவிட் வார்னர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் முக்கியமானவர் டேவிட் வார்னர். இவர் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். தற்போது ஆஸ்திரேலியாவின் சார்பில் டி20 ஒருநாள் மற்றும் சர்வதேச அளவிலான உலகக்கோப்பை ஐபிஎல் ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். புதியவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 121 ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள டேவிட் வார்னர், சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். அவர் ஒரு நாள் போட்டிகளில் 6932 ரன்கள் எடுத்திருந்தார்.