#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு மனைவி, மகளுடன் நடனம் ஆடிய டேவிட் வார்னர்..! வைரல் வீடியோ.!
நடிகர் சிவாஜிகணேசன், கமலகாசன் நடித்த தேவர்மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மெட்டுக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குடும்பத்துடன் நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பிரபலங்கள் உட்பட மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கொரோனா காரணமாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீடுகளிலையே ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இந்நிலையியல், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் அவ்வப்போது டிக் டாக் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில், தற்போது தேவர்மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மெட்டுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் நடனம் ஆடி அந்த விடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது . இதோ அந்த வீடியோ.