பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நேற்றைய போட்டியின் போது மும்பை அணி வீரர் செய்த காரியம்! கண்டுபிடித்த ரோஹித்! வைரலாகும் வீடியோ.
நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் டிகாக் பயிற்சி ஆட்டத்தின்போது அணியும் பேண்டினை அணிந்துகொண்டு விளையாட வந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகிவருகிறது.
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் புது கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து 149 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 16.5 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர். மும்பை அணி சார்பாக டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மும்பை அணி வீரர்கள் டிகாக் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் பேட்டிங் செய்ய இறங்கியபோது டிகாக் ஞாபகமறதியில் பரியிற்சியின் போது அணிந்து விளையாடும் பேண்டை அணிந்து களமிறங்கினார். முதலில் இதனை கவனிக்காத அவர் பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை எடுத்து வெளியில் விட்டார்.
இதனை பார்த்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிரித்துக்கொண்ட அங்கிருந்து சென்றார். பின்னர் போட்டி முழுவதும் தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை எடுத்து வெளியில் விட்டபடியே டிகாக் பேட்டிங் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
— Simran (@CowCorner9) October 17, 2020