ப்பா!! செம மேட்ச்..!! கடைசி பந்துவரை BP எகிறிடுச்சு.. சூப்பர் ஓவர் வரை சென்று போராடி வெற்றிபெற்ற டெல்லி அணி..



Delhi vs Hyderabad match ended with super over

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற T20 போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே சற்று அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

டெல்லி அணி சார்பாக ப்ரித்விஷா 39 பந்துகளில் 53 ரன்களும், அணியின் கேப்டன் பண்ட் 27 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்மித் 25 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது.

ipl t20

இதன்மூலம் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, வில்லியம்சன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றிக்காக போராடினார். இறுதியில் கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் அடித்தால் ஹைதராபாத் வெற்றி என்ற நிலையில், ஹைதராபாத் அணி வீரர்கள் வில்லியம்சன் மற்றும் சுஜித் இருவரும் 15 ரன்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தனர்.

இதனால் சூப்பர் ஓவரை முறை கொண்டுவரப்பட்டு இரண்டு அணிகளும் மீண்டும் களமிரங்கின. சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் வில்லியம்சன் மற்றும் வார்னர் இருவரும் நிர்ணயிக்கப்பட்ட 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

இதனால் டெல்லி அணி 6 பந்துகளில் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை வந்தது. டெல்லி அணி சார்பாக பண்ட் மற்றும் தவான் இருவரும் களமிறங்கியநிலையில், இருவரும் சற்று பதட்டத்துடன் ஆட தொடங்கினர். இறுதியில் கடைசி பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில், டெல்லி அணி கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து வெற்றி பெற்றது.

கடைசி பந்துவரை இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடி ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே அழைத்துசென்றுவிட்டனர். இறுதியில் டெல்லி அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று தனது 4 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.