பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முதல் பந்திலையே விக்கெட்! போட்டிக்கு நடுவே ராஜஸ்தான் அணி வீரர் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ.
டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தின்போது முதல் பந்திலையே விக்கெட் எடுத்த ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் மைதானத்திற்குள் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
நேற்று நடந்த ஐபில் 13 வது சீசன் 30 வது போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது. அதிகட்டபட்சமாக டெல்லி அணி வீரர் தவான் 57 ரன்களும், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 53 ரன்களும் அடித்திருந்தனர்.
இந்த சீசனில் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரிதிவிஷா முதல் பந்திலையே ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆட்டத்தின் முதல் பந்தை ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் டெல்லி அணி வீரர் ப்ரித்விஷாவுக்கு வீசினார்.
பந்து நேராக ஸ்டெம்பில் பட்டு போல்ட் என்ற முறையில் ப்ரித்விஷா வெளியேறினார். இந்நிலையில் முதல் பந்திலையே விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் மைதானத்திற்க்குள்ளையே அசாமின் பாரம்பரிய நடனமான பிஹு நடனத்தை ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆர்ச்சருடன் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியானும் நடனத்தை ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஆனாலும், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது.
Is the Bihu dance catching up in the @rajasthanroyals squad? 😅😅#Dream11IPL pic.twitter.com/40D9l9mhwC
— IndianPremierLeague (@IPL) October 14, 2020