தவான், பண்ட் அதிரடியால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இளம்படை



delhi-won-rajasthan-and-on-top-of-the-table

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரஹானே சிறப்பாக ஆடி ஐபிஎல் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தினை அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரஹானே 105 ரன்கள் அடித்தார். கேப்டன் ஸ்மித் 50 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

IPL 2019

சற்று கடினமான இலக்கை துரத்தி பிடிக்கும் கட்டாயத்தில் பேட்டிங் செய்ய துவங்கிய டெல்லி அணிக்கு தவான் இந்த ஆட்டத்திலும் சிறப்பான துவக்கத்தை அளித்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய தவான் 27 பந்துகளில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னில் ஆட்டமிழக்க, ரிசப் பண்ட் மற்றும் பிரிதிவி ஜோடி சேர்ந்தனர்.

IPL 2019

இவர்கள் இருவரும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் கவனமுடன் பொறுமையாக ஆடி றன் வேகத்தை உயர்த்தினார். சற்று அதிரடியாக ஆடிய ரிசப் பண்ட் அரைசதமடித்தார். பொறுமையாக ஆடிய பிரிதிவி 42 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பண்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்து டெல்லி அணியை கடைசி ஓவரில் வெற்றிபெற செய்தார்.

IPL 2019

இந்த தொடரில்11 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி அணிக்கு கிடைத்த ஏழாவது வெற்றியாகும். இதன் மூலம் ஏற்கனவே 10 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வென்று முதல் இடத்தில் இருந்த சென்னை அணியை ரன் ரேட் அடிப்படையில் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது டெல்லி அணி.