"வேங்கைக்கு வேகம் குறைந்து விட்டது" - தோனி பற்றி கவாஸ்கர் கருத்து..!



dhoni-batting-slowing-down

இந்தியாவிற்கு பல்வேறு இக்கட்டான தருணங்களில் வெற்றியை  தேடி தந்தவர் தோனி. சமீப காலத்தில் அவர் சிறப்பாக செயல்படாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்னும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், தோனி பேட்டிங் நுணுக்கங்களையும், ரன் குவிக்கும் திறமையையும் மேம்படுத்தும் கட்டாயத்தில் உள்ளார்.
 
இது குறித்து முன்னால் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், "தோனியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமாக உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் அவரின் ரன் குவிக்கும் வேகம், திறமை மழுங்கி வருகிறது. 

Gavaskar about dhoni
 
இங்கிலாந்து மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் அவர் வழக்கத்துக்கு மாறாக விளையாடினார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட் செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்த தோனி, ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்க முடியாதது ஏன். 
 
உள்நாட்டுப் போட்டிகளில் தோனி அதிகமாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் உலகக்கோப்பையை மனதில் வைத்து தோனி தனது பேட்டிங்கில் கவனத்தை செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

நேற்று நடந்த ஆசிய கோப்பைக்காண இறுதி போட்டியில் தோனி மிகவும் மெதுவாக ஆடியது ரசிகர்கள் மனதில் சற்று கவலையாகவே உள்ளது.