#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆசையோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அது வெறும் கனவாகவே மாறியது..! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு..!
இன்று இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெற்றேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர் தோனி. தனது அபார பேட்டிங் திறமையாலும், கீப்பிங் திறமையாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்தார்.
பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி, T20 உலகக்கோப்பை என இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை பெற்றுக்கொடுத்தார் தோனி. இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரானா அரையிறுதி ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் ரன் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார்.
அதன்பிறகு தோனி எந்த ஒரு சர்வேதச போட்டிகளிலும் விளையாடவில்லை. தோனி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என ஒவ்வொரு நாளும் காத்துக்கிடந்த ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம். இதனிடையே ஐபில் போட்டிகளில் தோனியை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் கொரோனா காரணமாக அதுவும் தள்ளிப்போனது.
தற்போது அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக தோனி நேற்றுதான் சென்னை வந்தார். இதனிடையே தோனி திடீரெனெ தனது ஓய்வை அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் சீருடையில் மீண்டும் எப்போது தோனியை பாப்போம் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு அது வெறும் கனவாகவே மாறிவிட்டது.