#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் நிரூபித்த தோணி! தானாக வெளியேறிய வார்னர்! உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள்!
சென்னை மற்றும் கைதராபாத் அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி இன்று சென்னையின் சொந்த மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்ததது. இதனை தொடர்ந்து விளையாடிய கைதராபாத் அணியின் தொடக்க வீரர் பரிஸ்டோவை ஹர்பஞ்சன் சிங்க் இரண்டாவது ஓவரில் வெளியேற்றினர்.
அதன்பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடி கைதராபாத் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். சென்னை அணி வீரர்கள் வீசிய பந்தை வார்னர், மனிஷ் பாண்டே இருவரும் சேர்ந்து பறக்கவிட்டனர்.
12 ஓவர்கள் முடிவில் கைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்து வலுவாக இருந்த நிலையில் வார்னர், மனிஷ்பாண்டேவின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் சென்னை அணி வீரர்கள் தடுமாறி வந்தனர்.
இந்நிலையில் 14 வது ஓவரை ஹர்பஞ்சன் சிங்க் வீசினார். அவர் வீசிய மூன்றாவது பந்தில் கிரீஸை விட்டு இறங்கிய வார்னரை மின்னல் வேகத்தில் செயல்பட்டு தோணி ஸ்டெம்பிட் செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஸ்டெம்பிட் சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிட்டிற்கான முடிவு மூன்றாவது நடுவரிடம் சென்றபோது, நடுவரின் முடிவு வருவதற்கு முன்பே தோனியின் சைகையை வைத்தே வார்னர் மைதானத்தைவிட்டு வெளியேற தொடங்கிவிட்டார்.