#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படுக்கையறையில் தோனியின் காலை கடித்த மனைவி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் காலை அவரது மனைவி சாக்சி கடிப்பதுபோல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் அனல்பறந்துகொண்டிருக்க வேண்டிய ஐபில் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத தோனியை ஐபில் மூலம் மீண்டும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
ஆனால், கொரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் அந்த ஆசை நிறைவேறவில்லை. பயிற்சிக்காக சென்னைக்கு வந்த தோனியின் மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். தற்போது ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் தோட்டத்தில் புல்லு வெட்டுவது, ஆன்லைன் மூலம் கிரிக்கெட் கோச்சிங் கொடுப்பது போன்ற வேலைகளை பார்த்துவருகிறார் தோனி.
இந்நிலையில், தோனியின் மனைவி சாக்சி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், தோனி படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்க, தோனியின் காலை கடிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார் சாக்சி. மேலும், நீங்கள் கவனத்தை ஈர்க்கும் நேரம் இதுதான் எனவும் அந்த புகைப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.