சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்! ஆஷஸ் தொடர் பரிதாபங்கள்



England all out for 67 runs in 3rd test

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.

மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. ஆட்டத்தின் முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

Ashes series

நேற்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை துவங்கியது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிய துவங்கின. 27.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணியின் ஜோ டென்லி அதிகபட்சமாக 12 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அதைவிட அதிகமாகவே 16 ரன்களை விட்டுக் கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட பன்னிரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Ashes series

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வுட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3, பேட்டின்ஸன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.