பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
புஸ்வானம் ஆகிய நியூசிலாந்து; அசால்டாக அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
இன்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு மூன்றாவது அணியாக முன்னேறியது.
அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பெயர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அரை சதம் அடித்த ஜேசன் ராய் 19வது ஓவரில் விக்கெட்டை இழக்க தொடர்ந்து ஆடிய பெயர்ஸ்டோவ் தொடர்ந்து இரண்டாவது சதத்தை விளாசினார்.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. மேலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது. நியூசிலாந்தை பொறுத்தவரை அடுத்த போட்டியில் பாகிஸ்தான் எப்படி வெல்லப் போகிறது என்பதைப் பொறுத்து அரையிறுதிக்குள் நுழையுமா இல்லையா என்பது தெரியும்.