"இங்கிலாந்து முழு பலத்துடன் உள்ளது" கண்ணில் பயத்துடன் ஆஸ்திரேலியா கேப்டன் பேட்டி



Facing england is little tough Finch talk

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாதி லீக் போட்டிகள் முடிந்தபிறகு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் நேற்றைய கடைசி லீக் போட்டிகள் இதனை தலைகீழாக மாற்றியது.

இலங்கையை வீழ்த்திய இந்தியா முதலிடத்தையும் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனால் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தையும், ஆஸ்திரேலியா இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. 

wc2019

நேற்று வரை அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா தான் எதிர்கொள்ளும் என பலரும் கணித்திருந்தனர். ஆனால் எந்த போட்டியிலும் இல்லாத அளவிற்கு நேற்றைய போட்டியில் தென்னாப்ரிக்கா அணி சிறப்பாக ஆடியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

wc2019

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா உட்பட 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி கடைசி இரண்டு லீக் போட்டிகளில் வலிமையான இந்தியா மற்றும் நியூசிலாந்தை வென்று புதிய உத்வேகத்துடன் காணப்படுகிறது. இதனால் அரையிறுதியில் அதுவும் அவர்கள் சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்வது சற்று கடினமான ஒன்று தான்.

wc2019

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச், "கோப்பையை வெல்ல எந்த அணியையும் வென்று தான் தீர வேண்டும். ஏற்கனவே இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ஆனால் இங்கிலாந்து தற்போது முழு பலத்துடன் உள்ளது. எனவே நாங்கள் எங்களது சிறப்பான வெற்றியை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என தெரிவித்துள்ளார். 


5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள சற்று பயமாக தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்கள் எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்பதை கணிக்க முடியாது. இதற்கு வரலாறே சாட்சி.