#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு திருமணம்! விராட், சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்ய உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சுழற்பந்து வீச்சாளர் சாஹல். இவர் இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
ஐ.பி.எல் தொடரிலும் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சாஹல், சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் இந்திய வீரர்களில் முக்கிய நபர் ஆவார். கொரோனா சமயத்தில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாஹல், தனஸ்ரீ வர்மாவுடன் நிச்சயமானதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தம் நடந்ததை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள சாஹல், அதில் தான் கரம்பிடிக்க உள்ள பெண்னுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். சாஹலுக்கு விராட் கோலி, சேவாக் உள்ளிட்ட பல வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.