#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! களைகட்டவிருக்கும் சேப்பாக்கம் மைதானம்.!
இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன.
3-ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.
சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பிப் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண்பதற்கு 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் நடைறைவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 50 சதவித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.