#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தவறை ஒப்புக்கொண்ட ரோகித் ஷர்மா! அபராதம் விதித்த ஐசிசி!
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டஇந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடியது. 5 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி தொடரை அபாரமாக கைப்பற்றியது.
மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகள் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு அதிலும் இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தொடர்ந்து 5 போட்டிகளிலும் தோற்ற நியூசிலாந்து அணியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.
இந்நிலையில் ஞாயிறு அன்று கடைசி மற்றும் 5 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் கேப்டன் கோலி ஆடவில்லை. கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா கடைசி போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். இந்தநிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி போட்டியில் நேரஅனுமதி கடந்து பந்து வீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ஓவர் ஒன்று அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசப்படவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கான போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியில் நடந்த இந்த தவறு இந்திய அணியில் ஒப்பு கொள்ளப்பட்டது. இதனால் முறைப்படியான விசாரணை நடத்துவதற்கான அவசியம் இல்லாமல் போனது.