#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலை விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்.! பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.!
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்னே வாகன விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தனது குடும்பத்துடன் சிட்னியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது மகன் ஜாக்சனுடன் ஷேன் வார்னே, பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஷேன் வார்னே கூறுகையில், நான் கொஞ்சம் அடிபட்டு, காயமடைந்துள்ளேன். மிகவும் வேதனையாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இந்தநிலையில், 2021 டிசம்பர் 8 ஆம் தேதி தி கபாவில் தொடங்க உள்ள முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான வர்ணனை செய்யும் பணிக்கு வார்னே திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.