#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்கும் இந்திய வீராங்கனை.!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது.
மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி நிரைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார்.
உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ள ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் நடக்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் ஹரிகா நிறைமாத கர்ப்பிணியாக கலந்துகொள்ளவுள்ளார்.