பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
பும்ராவின் அசுர வேகத்தில் ஆஸ். அணி 151 ரன்களில் சுருண்டது; 292 ரன்கள் இமாலய முன்னிலையில் இந்தியா பேட்டிங்.!
மூன்றாம் நாளான இன்று பும்ராவின் அசுர வேக பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி 151 ரன்கள் ஆல் அவுட் ஆனது.
மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின.
பின்ச் 8, ஹாரிஸ் 22, கவாஜா 21, ஷான் மார்ஷ் 19, ஹெட் 20, மிச்சல் மார்ஷ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 100 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்வந்த ஷான் மார்ஷ் (19), ஹெட் (20), பெயின் (22), லியான் (0), ஹசில்வுட் (0) என வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 1 , பும்ரா 6 , ரவீந்திர ஜடேஜா 2 முஹமது சமி 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் பெற்ற போதும், இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலிய அணியை ‘பேட்டிங்’செய்ய சொல்லாத காரணத்தால், இந்திய அணி 292 ரன்கள் என்ற இமாலய முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ளது.