இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை! அப்ரிடியின் பேச்சால் கொந்தளித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!



india-cricket-players-tweet-against-afridi

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் உதவி செய்தனர். இந்நிலையில் அப்ரிடி சமீபத்தில், உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார்  என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஹர்பஜன் சிங்,  இந்தியா குறித்தும், பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தமளிக்கிறது. அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும் படி கேட்டுக்கொண்டார். அதனால்தான்  மனிதாபிமான அடிப்படையில் உதவினோம். நம் பிரதமர் கூட எல்லைகள், கடந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காகதான் நாங்கள் அவருக்கு உதவினோம். ஆனால் அவர் நமது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும்  இல்லை என ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். 

 மேலும் இது தொடர்பாக காம்பீர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் 7 லட்சம் படையினர் 20 கோடி மக்கள் துணையுடன் உள்ளதாக 16 வயது அப்ரிடி கூறுகிறார். அப்படியிருந்தும், காஷ்மீருக்காக சுமார் 70 ஆண்டுகள் பிச்சை எடுத்துக்கொண்டுள்ளது. அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்க, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விஷத்தை பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் நினைவிருக்கிறதா? என பதிவிட்டுள்ளார். மேலும்  அப்ரிடியின்  கருத்துக்கு ஹர்பஜன் சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.